Janu / 2023 செப்டெம்பர் 28 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக பகுதியில் மீன் பிடித் தொழில் மேற்கொள்ளும் படகு உரிமையாளர்களால் தொழில் செய்வதில் ஏற்பட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு கோறி எதிர்ப்பு போராட்டத்தில் வியாழக்கிழமை (28) துறைமுகம் முன்பாக ஈடுபட்டனர்.
வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக நிருவாகம் மற்றும் மீன் பிடித் திணைக்களம் என்பவற்றுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
வெசல்; மொனிட்டரிங் சிஸ்டம் (VMS) கட்டணம் தொடர்பாகவும், ஐஸ் கட்டியின் விலை அதிகரிப்பு, தரமான வலை கிடைப்பதில்லை, துறைமுக இடம் பற்றாக்குறையாகவுள்ளதை நிவர்த்தி செய்து தருமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெசல்; மொனிட்டரிங் சிஸ்டம் (VMS) என்ற கருவியை அவுஸ்திரலிய அரசாங்கம் கடத்தல்களை கட்டுப்படுத்தும் திட்டத்தில் படகுகளை கண்கானிக்கும் நோக்கில் இலவசமாக வழங்கப்பட்ட கருவிகளுக்கு மாதாந்தம் ஆறாயிரம் ரூபா அறவிடுவதும் அப்பணத்தினை செலுத்தாத பட்சத்தில் படகு தொழிலுக்கு செல்வதற்கான அனுமதியை மறுப்பதும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்ட காரர்கள் தெரிவித்தனர்.
எம்.எம்.அஹமட் அனாம்



17 minute ago
43 minute ago
44 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
43 minute ago
44 minute ago
55 minute ago