Janu / 2026 ஜனவரி 27 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் மகளிர் மருத்துவத் துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாக லேப்ராஸ்கோபிக் ஹிஸ்டரெக்டமி (Laparoscopic Hysterectomy) என்ற நவீன குறைந்த காயம் கொண்ட கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை திங்கட்கிழமை (26) அன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிருடைய பூரண வழிகாட்டலின் கீழ் மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் எம்.சிவதீபன்ராஜ் தலைமையில் இந்த சத்திர சிகிச்சை சிறப்பாக நடத்தப்பட்டது.
லேப்ராஸ்கோபிக் ஹிஸ்டரெக்டமி என்பது பாரம்பரிய திறந்த அறுவை சிகிச்சை முறைகளுக்கு மாற்றாக, மிகச் சிறிய துளைகளின் மூலம் கேமரா மற்றும் நவீன கருவிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் அறுவை சிகிச்சை ஆகும்.
குறைந்த இரத்த இழப்பு, வலி மிகக் குறைவு , பெரிய அறுவை காயம் இல்லை, தொற்று அபாயம் குறைவு , விரைவான நடமாட்டம், மருத்துவமனையில் குறைந்த நாட்கள் தங்குதல், இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்புதல் என்பன இந்த முறையின் முக்கிய நன்மைகளாகும்.
இந்த நவீன முறையினால் நோயாளியின் உடல் மற்றும் மனநலம் சிறப்பாக பாதுகாக்கப்படுகிறது.
இந்த லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் மகளிர் மருத்துவ சேவைகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இதனால் நோயாளிகள் தூர நகரங்களுக்குச் செல்லாமல் தங்களது பகுதியிலேயே உயர்தர சிகிச்சை பெற முடிகிறது.
எம்.எஸ்.எம்.நூர்தீன்


5 hours ago
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago
8 hours ago