2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

ஹெரோயினுடன் இளைஞன் கைது

Janu   / 2023 செப்டெம்பர் 20 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி பிரதேசத்தில் ஹெரோயின் போதை பொருளை எடுத்து வந்த 22 வயது இளைஞர் ஒருவரை செவ்வாய்க்கிழமை (19) கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி முதியோர் இல்ல வீதியில்  நடாத்திய திடீர் சுற்றி வளைப்பு தேடுதலின் போது வீதியால் வந்து கொண்டிருந்த மேற்படி இளைஞரை பரிசோதித்த நிலையில் அவரிடம் இருந்து 2 கிராம் மற்றும் 210 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளை கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 ரீ.எல்.ஜவ்பர்கான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X