2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

20 போத்தல் கசிப்பு கடத்திய நபர் கைது

R.Tharaniya   / 2025 நவம்பர் 06 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு முச்சக்கரவண்டியில் சூட்சகமாக மறைத்து வைத்து கசிப்பு கடத்திய ஒருவரை ஏறாவூர் சவுக்கடி பகுதியில் வைத்து புதன்கிழமை (05) அன்று மாலை கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்துள்ளதுடன் 20 லீற்றர் கசிப்பை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர வின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி. மேனன் தலைமையிலான பொலிஸார் சம்பவ தினமான புதன்கிழமை (05) அன்று ஏறாவூர் சவுக்கடி வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்


இதன் போது ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு கசிப்பு கடத்தி சென்ற  முச்சக்கர வண்டியில்  நிறுத்தி சோதனையிட்ட போது  முச்சக்கர வண்டிக்குள் பொருத்தப்பட்ட ஒலிவாங்கி பெட்டி (பொக்ஸ்)  உள்ளே சூட்சகமாக  மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 போத்தல் கசிப்பை மீட்டதுடன் முச்சக்கரவண்டி சாரதியை கைது செய்தனர்.


இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X