2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

80 நோயாளர் கட்டில்கள் வழங்கிவைப்பு

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 09 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணனின் வேண்டுகோளுக்கு இணங்க வேர்ல்ட் விசன்  நிறுவனத்தினால் கல்முனை பிராந்தியதிற்கு உட்பட்ட வைத்தியசாலைகளுக்கு 80 நோயாளர் கட்டில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கொவிட் 19 தொற்று பரவல் நிலைமையை அடுத்து கல்முனைப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நோயாளர்களுக்கான கட்டில்கள் தட்டுப்பாடு  குறித்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் எடுத்துக்கொண்ட முயற்சியின் பலனாக இந்த கட்டில்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதன் படி சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான கட்டில்கள் கல்முனை பிராந்தியதிற்கு உட்பட்ட அக்கரைப்பற்று, திருக்கோவில் ,பாலமுனை, சாய்ந்தமருது, மருதமுனை அண்ணமலை ஆகிய 5 வைத்தியசாலைகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .