George / 2017 மே 30 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
“பாகுபலி 2” திரைப்படத்தை அடுத்து தென்னிந்திய திரையுலகில் தயாராகும் இன்னொரு பிரமாண்டமான சரித்திர திரைப்படமாக, அண்மையில் நடந்த கேன்ஸ் விழாவில் “சங்கமித்ரா” அறிவிக்கப்பட்டது.
இந்தத் திரைப்படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமான ஸ்ருதிஹாசன், வாள் சண்டை, குதிரையேற்றம் ஆகிய பயிற்சிகளை கடந்த சில மாதங்களாக செய்து வந்தார்.
இந்த நிலையில் “சங்கமித்ரா” திரைப்படத்தில் இருந்து திடீரென விலகும் முடிவை ஸ்ருதிஹாசன் எடுத்துள்ளார்.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது,
"துரதிர்ஷ்டவசமாக சங்கமித்ராவில் பங்காற்ற வேண்டாம் என்ற முடிவை ஸ்ருதிஹாசன் எடுக்கும் நிலையில் உள்ளார். இந்தத் திரைப்படம் எவ்வளவு பெரியது, 2 வருடங்கள் படப்பிடிப்புக்கான திகதி என அனைத்தும் தெரிந்தே ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தார்.
தனது கதாபாத்திரத்துக்கான பயிற்சி, முழு வடிவ திரைக்கதை மற்றும் முறையான படப்பிடிப்பு திகதி ஆகியவை குறித்த முக்கியத்துவம் அவருக்கு தெரியும். ஏப்ரல் மாதத்திலிருந்து சிறந்த சண்டைப் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற ஆரம்பித்துவிட்டார். 
ஆனால், 'சங்கமித்ரா' படத்தின் மீது அவருக்கிருந்த ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை தாண்டி, இந்த முடிவை எடுக்கவேண்டியிருந்தது. முழுமையான ஸ்கிரிப்ட் அவருக்கு தரப்படவில்லை. படப்பிடிப்பு திகதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை. இதுவே அவரது முடிவுக்குக் காரணம்” என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 hours ago
8 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
17 Jan 2026
17 Jan 2026