2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

வதந்தி உண்மையானால் ஐஸ்வர்யாவுக்கு சந்தோஷமாம்

George   / 2016 மார்ச் 03 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுவாக தமிழ் சினிமாவில் வதந்திக்கும் வாந்திக்கும் எப்போதுமே பஞ்சம் இருந்ததில்லை. அதிலும் நடிகர்களைவிட நடிகைகள் தான் அதிகமாக வதந்திகளில் சிக்குவது அதிகம். முன்னணி நாயகி தொடங்கி அறிமுக நாயகி என பாரபட்சமின்றி வதந்திகள் பதம்பார்ப்பதும் உண்டு.

இன்று முன்னணியில் உள்ள நயன்தாரா உட்பட பெரும்பாலான நடிகைகள் வதந்திகளில் சிக்கி வந்தவர்கள் தான். பொதுவாக வதந்திகளில் சிக்கும் நடிகைகள் அது பொய்யான தகவல் நம்பாதீர்கள் என்;றுதான் சொல்வது வழமை. காதல் கிசுகிசுவாக இருந்தாலும் அது உண்மையாகவே இருந்தாலும் இல்லை என்று சொல்லி மறுத்துவிடுவார்கள்.

ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தன்னைப் பற்றிய வதந்தி உண்மையாக வேண்டும் என்று விருப்பப்படுகின்றார் என்று சொன்னால் ஆச்சரியமாக உள்ளதல்லவா? ஏன் என்று கேட்கின்றீர்களா தொடர்ந்து படியுங்கள்...

அட்லி இயக்கத்தில் தெறி திரைப்படத்தில் நடித்துள்ள விஜய், முன்னதாக தன்னை வைத்து அழகிய தமிழ் மகன் என்றத் திரைப்படத்தை இயக்கிய பரதன் இயக்கும் திரைப்படத்தில் அடுத்ததாக நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். 

குடும்பப் பாங்கான கதை கொண்ட அந்தத் திரைப்படத்தில் விஜய் இரண்டு விதமான வேடங்களில் நடிக்கவுள்ளார். மூன்று நடிகைகள் ஜோடி என்றும், அந்த வேடங்களில் காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பதாகவும் கடந்த சில தினங்களாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தன.

ஆனால், விஜயுடன் தான் நடிப்பதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படி சொல்கின்றார், 'விஜய்யின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். குறிப்பாக, அவரது நடனத்தை ரொம்பவே இரசிப்பேன். அதனால், அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்து வருகிறது. 

விஜய்யின் 60ஆவது திரைப்படத்தில் நடிப்பதுப்பற்றி அந்தத் திரைப்படக்குழுவில் இருந்து இதுவரை யாரும் என்னை அணுகவில்லை. அதனால், நான் விஜய் திரைப்படத்தில் நடிப்பதாக வெளியான செய்தியில் உண்மையில்லை' என்கிறார்.

'அதேசமயம், இந்த வதந்தியே உண்மையானால் அதை விட பெரிய சந்தோசம் எதுவுமில்லை' என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது மனதில் உள்ள ஆசையை கொட்டித் தீர்த்துவிட்டார்.

ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா ராஜேஷ்...

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .