George / 2017 ஜூன் 01 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷ்ரா ஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடிப்பில் “விவேகம்” திரைப்படம் உருவாகி வரும்.
படப்பிடிப்பு முழுவதும் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே தொடர்ந்து நடைபெற்றதுடன், பல்கேரியா நாட்டில் அதிகமாக நடத்தப்பட்டது.
கடைசி கட்டப் படப்பிடிப்பின் போது அஜீத், தோள் பட்டையில் காயம் அடைந்ததாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
காயம் அடைந்தாலும் படப்பிடிப்பு தடைபடக் கூடாதென அஜீத் காயத்துடன் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து முடித்தார் என்கிறார்கள்.
“வேதாளம்” கிளைமாக்ஸ் படப்பிடிப்பில் அஜீத், காலில் காயம் அடைந்ததைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சத்திரச்சிகிச்சை செய்து கொண்டார்.
அதைத் தொடர்ந்து சில மாத காலம் ஓய்வில் இருந்தார். ஓய்வுக்குப் பிறகு “விவேகம்” படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
28 minute ago
39 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
39 minute ago
56 minute ago