2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

கோபம் எனது பலவீனம் - ரஜினிகாந்த்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 07 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கோபம் என்பது என்னுடைய பலம் என நீண்ட நாள் நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, அது பலம் அல்ல, பலவீனம் என புரிய வைத்தவர் கவியரசு வைரமுத்து. ஏனெனில், அவர் என்னை விட அதிக கோபக்காரர் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தால்தான், உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். எனவே, முதலில் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

வைரமுத்து மகன் கபிலன் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்துள்ள ரஜினி, மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது, திருமணத்தில் அனைவரையும் திருப்திபடுத்த வேண்டும் என்பது முடியாத காரியம். அவ்வாறு அனைவரையும் திருப்திபடுத்த வேண்டும் என்று நினைப்பவன் மிகப் பெரிய முட்டாள் என்றும்  இரண்டு திருமணத்தை நடத்தியதன் மூலம் தான் அதைத் தெரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இது தெரிந்திருந்தும் அனைவரையும் திருப்திபடுத்த வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து இங்கு எடுத்திருக்கும் முயற்சி பாராட்டுக்குரியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • xlntgson Wednesday, 08 September 2010 09:33 PM

    நல்ல கருத்து.கோபத்தை ஒட்டியும் வெட்டியும் கூறி இருக்கின்றார் .இதனால் தான் இவரை ஞானி என்று கூறுகின்றனரோ? நானும் கோபப்படாமல் இருந்து பார்த்தேன். பெருத்த நஷ்டம்,கோபப்படாதவர்களை 'தோது' என்று கூறுவதையும் கோபப்படுத்தாமல் மனிதர்களுடைய நட்பை பேணவும் இயலாமலும் இருக்கின்றது.கோபம் வராத ஆட்களை எதை சொன்னால் அவர்களுக்கு கோபம் வரும் என்று ஆராய்ச்சியில் அநேகர் இருப்பது போல் தெரிகிறது.பைட்டிங் 'biting' என்கின்றனர்.யாரையாவது தாழ்த்தி பேசாவிட்டால் அவர்களுக்கு நட்புகொள்ளமுடியாது போலும்.விளிப்பதிலே தெரியும்,தோ, தோப்பி?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .