2025 மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமை

அதிக வெப்ப நிலை ஏப்ரல் வரை நீடிக்கும்

Freelancer   / 2024 மார்ச் 01 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் அதிக வெப்பமான வானிலை எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே முடிந்தவரை வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு திணைக்களத்தின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

காற்றின் வேகம் குறைவடைந்துள்ளமை மற்றும் வானில் முகில் கூட்டம் குறைவடைந்துள்ளமை என்பன இந்த வெப்பநிலைக்கான காரணமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .