2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

அதாவுல்லாவின் கல்முனை அமைப்பாளர் சுதந்திரக்கட்சியில் இணைந்தார்

Super User   / 2010 மார்ச் 03 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸின் கல்முனைத்தொகுதி அமைப்பாளர் ஹிய்பதுல் கரீம் இன்று மாலை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துகொண்டார்.

அமைச்சர் பேரியல் அஷ்ரப் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதாக அம்பாறையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

தேசிய காங்கிரஸின் சார்பில்,அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் இவர் போட்டியிடவிருந்தார்.

எனினும்,கடைசி நேரத்தில் இச்சந்தர்ப்பம் மறுக்கப்பட்டமையால் தாம் சுதந்திரக்கட்சியில் இணைந்துகொண்டதாக ஹிய்பதுல் கரீம் கூறியுள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் அமைச்சர் பேரியல் அஷ்ரபின் வெற்றிக்காக தாம் உழைக்கப்போவதாகவும்  ஹிய்பதுல் கரீம் குறிப்பிட்டதாக கல்முனை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .