2021 ஜூன் 14, திங்கட்கிழமை

அனர்த்தத்தால் இதுவரை 194 பேர் பலி

Editorial   / 2017 மே 30 , பி.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கை அனர்த்தங்களினால், மரணமடைந்தோர் எண்ணிக்கை 194ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, காணாமற் போனோரின் எண்ணிக்கை 99ஆகும் என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

கடுங்காற்று, மண்சரிவு, வெள்ளப்பெருக்கு மற்றும் பெய்த அடைமழை காரணமாக, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக காணப்படுகிறது. இதேவேளை, மேற்படி அனர்த்தங்களினால் 99 பேர் காணாமல் போயுள்ளனர்.

15 மாவட்டங்களில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக, 157,177 குடும்பங்களைச் சேர்ந்த 604,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வனர்த்தங்களினால், 1,402 வீடுகள் முழுமையாகவும் 7,071 வீடுகள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் 376 மத்திய முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவற்றில், 20,907 குடும்பங்களைச் சேர்ந்த 83,224 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நிலையம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .