2021 ஜூன் 21, திங்கட்கிழமை

அமிதாப் பச்சன் நடிப்புத்துறையில் 40 ஆண்டுகள்; ரஜனி - கமல் பங்கேற்பு

Super User   / 2010 மார்ச் 14 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய திரைப்படத்துறை வரலாற்றில் இன்றும் 'சுப்பர் ஸ்டார்' என்று வர்ணிக்கப்படும் பொலிவூட் நட்சத்திரம் அமிதாப் பச்சான் திரையுலகில் கால்பதித்து  40 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

இதனை முன்னிட்டு பிரமாண்டமான விழாவொன்று எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி மும்பாயில்  இடம்பெறவுள்ளது.

இவ்விழாவில் தென்னிந்திய நட்சத்திரங்களான சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்த்,உலக நாயகன்  கமல்ஹாசன்  ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மலையாள திரைப்படத்துறையின் சுபர் ஸ்டார்களான மம்முட்டி,மோகன்லால் ஆகியோருடன் தெலுங்கு சுபர்  ஸ்டார் சிரஞ்சீவி உட்பட பெரும் எண்ணிக்கையான நடிக , நடிகைகள் கலந்துகொள்ளவுள்ளனர்.கலாசார நிகழ்ச்சிகளும் இங்கு அரங்கேற்றப்படவுள்ளன.

அமிதாப்பின் மகன் அபிஷேக்,மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் கலை நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளனர்.எதிர்வரும் அக்டோபர் மாதம் 11ஆம் திகதி அமிதாப் பச்சனின் பிறந்த நாள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .