Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Gavitha / 2017 மே 19 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலதாமதமின்றி, அமைச்சரவையில் மறுசீரமைப்பை கொண்டுவருவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவில்லையென்றால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ளவர்கள், தொடர்ந்தும் நல்லாட்சியில் இருக்க வேண்டுமா என்று கருதவேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
“அமைச்சரவை மறுசீரமைப்பு கட்டாயமானது. அது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்னெடுக்கப்படும். இது, கூடிய விரைவில் முன்னெடுக்கப்படவேண்டும் என்றே, சு.க கோருகின்றது. காரணம், சு.க அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என்று பலரும் இந்த மாற்றத்தையே விரும்புகின்றனர்” என்று அவர் கூறினார்.
மேலும், மறுசீரமைப்பின் போது, ஐக்கிய தேசியக்கட்சியினரது அமைச்சரவைப் பதவிகள் அப்படியே இருக்க வேண்டும் என்றும் சு.க வின் அமைச்சரவைப் பதவிகள் மாத்திரமே மாற்றப்படும் என்பதும், தவறான கருத்தாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“அவ்வாறான எந்தவொரு ஒப்பந்தமும், சு.க மற்றும் ஐ.தே.கவுக்கு இடையில் இல்லை. பிரதமருடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர், இரண்டு கட்சிகளிலுள்ள எந்த ஒரு அமைச்சரயும் நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக இரண்டு கட்சியிலுள்ள எந்தவொரு அமைச்சரையும் நியமிப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, அரசியலமைப்பின் படி அதிகாரம் உண்டு” என்று அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago