2021 ஜூன் 17, வியாழக்கிழமை

அமெ. விருது பெற்ற ஜான்சிலா மஜீத்துக்கு நாளை கௌரவிப்பு

Super User   / 2010 மார்ச் 24 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச பெண்களுக்கான உயர் விருதினை பெற்றுக்கொண்ட ஜான்சிலா மஜீத்தை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில்,  வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நாளை மாலை 4 மணிக்கு இடம்பெறவிருக்கிறது.

இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணியான ஜான்சிலா மஜீத் என்பவர் 20 வருடகாலமாக இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பணியாற்றியமைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.  

கடந்த 10ஆம் திகதி அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் இந்த விருதை வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .