2021 ஜூன் 21, திங்கட்கிழமை

பொதுமக்கள் சாதாரண சட்டத்தின் கீழ் நடமாட இடமளிக்கவேண்டும் - ஜெனரல் பொன்சேகா

Super User   / 2010 மே 04 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இருக்கும் வரை அவசரகாலச் சட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமாயின் அதற்கு வேறு பெயரை சூட்ட வேண்டும் எனவும் அவசரகாலச் சட்டம் என்பது அவசர நேரத்தில் அமுல்படுத்த வேண்டியது என ஜனநாயக தேசியக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
 
அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தான் ஒரு அரசியல் கைதி என்று தெரிவித்த அவர், நாட்டில் அமுலில் இருக்கும் சாதாரண சட்டத்தின் கீழ் பொதுமக்களை நடமாடுவதற்கு இடமளிக்க வேண்டும் என்றும் கூறினார். 

இந்த அவசரகால சட்டத்தினால் பொதுமக்கள் அடிமைப்பட்டுள்ளனர். பழிவாங்கப்படும் அரசியல் நடத்தப்படுகின்றது. 

போரினால் வெற்றி கண்ட போதிலும் தேசிய ஒற்றுமை ஏற்படவில்லை. இராணுவத்தினரை அனைவரும் மறந்துவிட்டனர். இதனால் பாதுகாப்பு தரப்பினர் விரக்தியடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .