2021 ஜூன் 16, புதன்கிழமை

ஆனந்தாக் கல்லூரி அதிபர் மீது இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

Super User   / 2010 மே 04 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் அதிபர் தரம் ஒன்றுக்கான மாணவர் அனுமதியின் போது இலஞ்சம் பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேடிடம் முறைப்பாடு செய்துள்ளார். 

மருதானை பகுதியில் ஆனந்தாக் கல்லூரிக்கு அருகாமையில்  வசிக்கும் சரத் வலகம என்பவரின் மகனை கடந்த 2005ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கு அனுமதிப்பதற்கு மறுத்ததனால் இவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.   

சரத் வலகமமின் முறைப்பாட்டை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடர்ந்து விசாரித்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .