2021 ஜூன் 24, வியாழக்கிழமை

புலிகளுக்கு நிதி சேகரித்தவர்களிடம் ஆஸி. பொலிஸ் விசாரணை;நீதிமன்றம் அதிருப்தி

Super User   / 2010 மார்ச் 31 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கையை சேர்ந்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு எதிராக பொலிஸார் நடத்திய விசாரணை தொடர்பில் அந்த நாட்டு உயர் நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த மூன்று ஆஸ்திரேலியர்கள் தொடர்பில் கடந்த இரண்டு வருடங்களாக ஆஸ்திரேலியப் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இவர்களை  கைதுசெய்யும்போதும்,  விசாரணைகளின்போதும்   உரிய சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையை சேர்ந்த மூன்று ஆஸ்திரேலியர்களில் ஒருவரான ஆறுமுகம் ரஜீவனை பொலிஸார் துப்பாக்கிமுனையில் கைதுசெய்ததாக குறிப்பிடப்படுகிறது.

இலங்கையை சேர்ந்த மூன்று ஆஸ்திரேலியர்களும் கடந்த 2004ஆம் ஆண்டுக்கும், 2007ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டிருந்தனர்.  Comments - 0

 • kadavul Wednesday, 31 March 2010 09:44 PM

  இது
  அங்கு
  நடக்குமா
  இலங்கையில்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .