2021 ஜூன் 17, வியாழக்கிழமை

இடம்பெயர்ந்த மக்களின் வாக்களிப்புக்கு போக்குவரத்து வசதி - சார்ள்ஸ்

Super User   / 2010 மார்ச் 04 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகந்தினி ரட்னம்

இடம்பெயர்ந்த மக்கள்  எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கான வசதிகளை  செய்துகொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் இன்று தெரிவித்தார்.

வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் இடம்பெயந்த மக்கள்  வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகள் செய்துகொடுக்கப்படும் எனவும்   தமிழ்மிரர் இணையதளத்திற்கு  பி.எஸ்.எம் சார்ள்ஸ் குறிப்பிட்டார்.

சுமார் 16,000 இடம்பெயர்ந்த மக்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

விண்ணப்பிக்காத இடம்பெயர்ந்த மக்களின் பெயர் விபரங்கள் பிரதேச செயலாளர்களிடம் வழங்கப்படும் எனவும் வவுனியா அரசாங்க அதிபர்  குறிப்பிட்டார்.

கடந்தமுறை போன்றில்லாது, இந்தமுறை வாக்களிப்பவர்களை மாத்திரம் அடையாளம் கண்டு அவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும் வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ள்ஸ்  வலியுறுத்தினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .