2021 ஜூன் 24, வியாழக்கிழமை

கைவிடப்பட்ட வாகனங்களுக்கு உரிமை கோருவதாக கிளி. அரச அதிபர் தகவல்

Super User   / 2010 மே 05 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகந்தினி ரட்னம்

புதுக்குடியிருப்பு அம்பலவன் பொக்கனை, முள்ளிவாய்க்கால் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் உரிமை கோரிவருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருடன் இன்று தமிழ்மிரர் இணையதளம் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இதனைக் கூறினார்.

மேற்படி வாகனங்களுக்கு உரிமையாளர்கள் தினமும் தமது ஆவணங்களைக் காண்பித்து உரிமைகோருவதாகவும் அவர் கூறினார்.

குறிப்பிட்டதொரு  திகதியில் உரிமையாளர்களிடம்  மேற்படி சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் கையளிக்கப்படும் எனவும் றூ.கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, புதுக்குடியிருப்பு அம்பலவன் பொக்கனை, முள்ளிவாய்க்கால் பகுதிகளிலுள்ள மக்கள் இடம்பெயரும்போது தமது வாகனங்களை கைவிட்டுச்சென்றிருந்தனர். இந்நிலையில் படையினரால் மீட்கப்பட்ட சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை உரியவர்களிடம் கையளிக்கப்படவிருப்பதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அறிவித்திருந்தார். இதன் முதற்கட்ட நடவடிக்கையாக 5000 மோட்டார் சைக்கிள்களும், 7000 சைக்கிள்களும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்ப்டவிருக்கின்றன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .