2021 ஜூன் 19, சனிக்கிழமை

இந்தியப்பேராசிரியர் பெரியார்தாசன் ரியாத் நகரில் இஸ்லாத்தை தழுவினார்

Super User   / 2010 மார்ச் 13 , பி.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

இந்தியப்பேராசிரியர் பெரியார்தாசன் சவூதி  அரேபியாவில் கடந்த  வியாழக்கிழமை புனித இஸ்லாத்தை           தழுவிக்கொண்டார்.இத்தகவலை சற்று முன் தமிழ்மிரர் இணையதளத்திடம் சவூதி அரேபியாவில் வெளியாகும் அரப்நியூஸ் பத்திரிகையின் ஆசிரியபீடத்தைசேர்ந்த எம்.சி.ரசூல்தீன் உறுதிப்படுத்தினார்.

அமெரிக்க,லொஸ் ஏஞ்ஜலிஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பகுதி நேர
விரிவுரையாளராகக்கடமையாற்றும் பெரியார்தாசன் தன்னுடைய பெயரை 'அப்துல்லாஹ் 'என்று மாற்றியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தத்துவவியல் பேராசிரியராக நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர்,திராவிடர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

தான் மேற்கொண்ட பல மதங்களைப்பற்றிய ஆய்வுகளின் முடிவில் அல்-குர் ஆன் மாத்திரமே இறைவனிடமிருந்து அருளப்பட்டு.அதே வடிவில் பாதுகாப்பாக உள்ளது என்பதை தாம் கண்டுகொண்டதாகவும் தம்மிடம் கூறியதாக பத்திரிகையாளர் ரசூல்தீன் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

இந்தியாவின் புகழ்பெற்ற தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் 'கருத்தம்மா'திரைப்படத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள பேராசிரியர் பெரியார்தாசன்,சிறந்த தொலைக்காட்சி நாடக நடிகரும்,பேச்சாளருமாவார்.

பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவிய செய்தியறிந்து,தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தலைவர்  எம்.எச்.ஜவாஹிருல்லாஹ்  தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தியதாக தமிழக செய்திகள் கூறுகின்றன.

பேரிசிரியர் அப்துல்லாஹ்  தற்போது புனித உம்ரா யாத்திரையை மேற்கொண்டுள்ளர் என்றும் எம்.சி.ரசூல்தீன் தமிழ்மிரர் இணையதளத்திடம் குறிப்பிட்டார். 

  Comments - 0

  • Kamil Monday, 15 March 2010 10:43 PM

    நேர் வழி எப்போதும் மறைவது இல்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .