2021 ஜூன் 14, திங்கட்கிழமை

இந்தியாவில் தஸ்லீமாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: 2 பேர் பலி ; நூற்றுக்கணக்கானோர் காயம்

Super User   / 2010 மார்ச் 03 , பி.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின்,கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை பாதுகாப்பை பலப்படுத்த மாநில அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.

சர்ச்சைக்குரிய பங்களாதேஷ் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீனுக்கு எதிராக நேற்று ஷிமோகா,ஆஸன் மாவட்டங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.இங்கு இடம்பெற்ற கலவரத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

கன்னட மொழியிலான இரண்டு பத்திரிகைகளில் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவுக்கு எதிராக தஸ்லீமா எழுதிய கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன.இதனைத்தொடர்ந்து,வன்முறைகள் வெடிக்கத்தொடங்கின.

நாளை கர்நாடகத்தலைநகரான பெங்களூரில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறலாம் என அஞ்சப்படுகிறது.

இதேவேளை,பங்களாதேஷ் பெண் எழுத்தாளர் தஸ்லீமா நஸ் ரீன் தாம் அவ்வாறானதோர் கட்டுரை எழுதவில்லை என  மறுப்புத்தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மறைந்து வாழும் இவர் சுவீடன் நாட்டுக்குச்சென்று விட்டு அண்மையில் புது டெல்லி வந்திருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .