2021 ஜூன் 19, சனிக்கிழமை

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் இலங்கை அகதிகளை இணைக்க தீர்மானம்

Super User   / 2010 மே 03 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியா முழுவதும் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளும் இணைக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பானது இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக வரும் ஜூன் முதலாம் திகதி முதல் ஜூன் 15ஆம் திகதி வரையிலும், இரண்டாம் கட்டமாக எதிர்வரும் 2011ஆம் ஆண்டு பெப்ரவரி 2ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இலங்கை அகதிகள் மற்றும் மியன்மார், திபெத் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்களும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்க்கப்படுவார்கள் என்று இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .