2025 மே 13, செவ்வாய்க்கிழமை

இன்று நள்ளிரவு முதல் ரயில் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

J.A. George   / 2024 மார்ச் 05 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் மேலும் பல தொழிற்சங்கங்களும் இணைந்துகொள்ளவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சந்தன லால் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ரயில் இயந்திர சாரதிகள் சங்கம், ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் மற்றும் ரயில் மேற்பார்வை முகாமையாளர்கள் சங்கம் ஆகியன இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X