2021 ஜூன் 17, வியாழக்கிழமை

இராமநாதன் முகாமில் 4 வாக்களிப்பு நிலையங்கள்- சிவசக்தி ஆனந்தன்

Super User   / 2010 ஏப்ரல் 06 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகந்தினி ரட்னம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்காக இராமநாதன் முகாமில் நான்கு வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவிருப்பதாக இன்று தமிழ்மிரர் இணையத்தளத்திடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

தாம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே, இராமநாதன் முகாமில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு அடையாள அட்டை அளவிலான பத்திரமொன்றை விநியோகித்து தமக்கு வாக்களிக்குமாறு கோரிவருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் எவ்வளவு தூரம் நேர்மையானதாக நடைபெறும் எனவும் சிவசக்தி ஆனந்தன் கேள்வியெழுப்பினார்.

நீதியானதும், நியாமானதுமான தேர்தல்கள் நடைபெறுவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவாதமளிக்க வேண்டும் எனவும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் தொடர்புகொள்ள தமிழ்மிரர் இணையதளம் முயற்சித்துவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .