2021 ஜூன் 21, திங்கட்கிழமை

அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அமெ. குற்றச்சாட்டு

Super User   / 2010 மார்ச் 12 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற மனித உரிமை மீறல்ச் சம்பவங்களில் இலங்கை அரசாங்கம்  ஈடுபட்டிருப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள வருடாந்த அறிக்கையிலே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தது.

இலங்கையில் பல முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் இதுவரையில் சரியான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த வருடம் இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் நிலவியதாகவும் அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .