2021 ஜூன் 17, வியாழக்கிழமை

இலங்கை மீனவர்கள் 6 பேர் விடுதலை

Super User   / 2010 ஏப்ரல் 06 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமேசுவரம், ஏப். 5: மண்டபத்தில் இருந்த சிங்கள மீனவர்கள் 6 பேர் விடுதலை செய்யப்பட்டு, இலங்கைக்கு திங்கள்கிழமை படகுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.  
சென்ற மாதம்  நான்காம் திகதி அன்று நாகை கடல் பகுதியில் மீன் பிடித்த இலங்கை திரிகோணமலையைச் சேர்ந்த ஆறு இலங்கை மீனவர்கள் உபுல், உதயசிங்க , ரவிந்தீர, சுசீத், சமீர உள்ளடங்கலாக 6 பேரை மண்டபம் கடலோர காவல் படை வீரர்கள் கைது செய்தனர். 
பின்னர், இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல், தமிழக கடலோரப் பாதுகாப்பு போலீஸôரின் பாதுகாப்பில் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இந் நிலையில், மத்திய, மாநில அரசுகள் சிங்கள மீனவர்கள் 6 பேரையும், படகுடன் விடுதலை செய்து இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டது.
அதன்படி, படகுடன் 6 பேரும் இந்தியக் கடலோரக் காவல் படை கப்பல் பாதுகாப்புடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  
இவர்களை மண்டபம் கடலோரக் காவல் படை துணை கமாண்டர் சர்மா, மண்டபம் மீன் துறை உதவி இயக்குநர் தினகரன், நிரபராதி மீனவர் விடுதலைக்கான கூட்டமைப்பு பிரதிநிதி யூ.அருளானந்தம் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.நன்றி தினமணி

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .