2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

இலங்கை முஸ்லிம் வர்த்தகர் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

Super User   / 2010 மார்ச் 12 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்


EXCLUSIVE
பாகிஸ்தானில் கடந்த பலவருடங்களாக வர்த்தகப்பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கையை சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.இத்தகவலை இறந்தவரின் தந்தை  இன்று தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

கொழும்பு,வெள்ளவத்தையைச்சேர்ந்த அப்துர் ரஹ்மான் தமீம் (வயது 38) என்ற இளம் வர்த்தகரே இவ்வாறு கொல்லப்பட்டவராவார்.

பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரான கராச்சியில் உள்ள நியூ டவுன் பள்ளிவாசலுக்கருகில் இரவுத்தொழுகையை முடித்துவிட்டு வாகனத்தில் ஏறுகையில் இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்துப்பாக்கிச்சூட்டுச்சம்பவத்தின்போது  பாகிஸ்தானைச்சேர்ந்த மூன்று இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் இயங்கும் காத்தமி நுபுவ்வத் என்ற அமைப்புடன் சேர்ந்து அப்துர் ரஹ்மான்  சமயப்பிரசார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாக் அவரது தந்தை எம்.ஆர்.எம்.தமீம் தமிழ்மிரருக்கு மேலும் தெரிவித்தார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான அப்துர் ரஹ்மான்  கடந்த வாரம் தனது குடும்ப உறவினர் ஒருவரது திருமண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக கொழும்புக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று வெள்ளிக்கிழமை  நன்பகல் 2.30 மணியளவில் கராச்சியிலுள்ள பின்னூரி டவுன் என்னுமிடத்தில் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டது.

இறுதிதூதர் முகம்மத் நபிக்குப்பிறகு இன்னும் ஒரு தூதர் வருவார் என்று சொல்லும் ஒரு குழுவினரே துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் இறந்தவரின் தந்தையான  எம்.ஆர்.எம்.தமீம், தமிழ்மிரர் இணையதளத்திடம் கூறினார்.    

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .