2021 மே 15, சனிக்கிழமை

உணவுச் சட்டத்தைத் திருத்த ‘ஆலோசனைகளை கூறவும்’

Kogilavani   / 2017 ஜூன் 14 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

உணவுச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள உள்ளதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டு நிர்வாக அலகு அறிவித்துள்ளது.

உணவு நுகர்வு முறை, உணவு உற்பத்தித் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவகையில், உணவுப் பயன்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டே, இந்த மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக, அந்த அலகு அறிவித்துள்ளது.   

தற்போது, நடைமுறையில் இருப்பது 1980ஆம் ஆண்டு, உணவுச் சட்டமாகும். அந்தச் சட்டம் தற்போதைய காலச்சூழலுக்கு பொருத்தமானதாக அமையாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. அதனையடுத்தே, அச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தீர்மானித்ததாக அந்த அலகு அறிவித்துள்ளது.  

அந்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான கருத்துகள் மற்றும் யோசனைகளை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் முன்வைக்க முடியும் என்றும் பொதுமக்களிடம் அந்த அலகு குறிப்பிட்டுள்ளது.   

கருத்துகள் மற்றும் யோசனைகளை அனுப்பிவைக்க விரும்புவோர், பணிப்பாளர், உணவு கட்டுப்பாட்டு நிர்வாக அலகு, சுகாதார அமைச்சு, 7ஆவது மாடி, டி.பீ ஜயா மாவத்தை, கொழும்பு-10 என்ற முகவரிக்கோ அல்லது, foodcontrol@outlook.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பிவைக்கலாம் என்றும் அந்த அலகு குறிப்பிட்டுள்ளது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .