2025 ஜூலை 02, புதன்கிழமை

'உதயன்' - 'சுடரொளி' பத்திரிகைகளுக்கு எதிராக வழக்கு தொடர ஈ.பி.டி.பி தீர்மானம்

Super User   / 2010 மார்ச் 30 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

'உதயன்' மற்றும் 'சுடரொளி' ஆகிய பத்திரிகைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு தீர்மானித்திருப்பதாக சமூகசேவைகள் மற்றும் சமூக நலன்புரித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேற்படி பத்திரிகைகளில் யாழ் சாவகச்சேரி மாணவன் படுகொலை; ஈ.பி.டி.பி உறுப்பினருக்கு பிடியாணை! நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை என்ற தலைப்பில் நேற்று செய்தி வெளியாகியிருந்தது.

இதனாலேயே, மேற்படி பத்திரிகைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

'உதயன்' மற்றும் 'சுடரொளி' ஆகிய பத்திரிகைகளில் வெளியான செய்தியானது, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மீது திட்டமிட்டு சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டு எனவும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .