2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

உரத் தட்டுபாடுக்கு தீர்வு: அரசாங்கம் அசமந்தம்

Kamal   / 2020 ஜனவரி 18 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசாங்கத்திடம் உரத் தட்டுபாடுக்கு தீர்வு காண்பதற்கான எந்தவொரு வேலைத்திட்டமும் இல்லையென முன்னாள் அமைச்சர் பீ.ஹரிஸன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், 

தான் விவசாய அமைச்சராக இருந்த போது தட்டுப்பாடை நிவர்த்திக்க போதுமான உரத் தொகையை இறக்குமதி செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்பே அறிவுறுத்தியிருந்தாகவும் தெரிவித்துள்ளார். 

இரண்டரை மாதங்களாக விவசாயிகள் உரத்துக்காக தட்டுப்பாடுகளை எதிர்கொண்டு வந்தாலும், அந்த பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று  இல்லை எனவும் சாடினார்.

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .