2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஊடகவியலாளர் முத்தையா காலமானார்;இன்று இறுதிக்கிரியை

Super User   / 2010 மார்ச் 04 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் பி.முத்தையா நேற்று கொழும்பில் காலமானார்.இவரது பூதவுடல் தற்போது பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் தற்போது பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கிரியை இன்று மாலை 3.30 மணிக்கு இடம்பெறும்.அதனைத்தொடர்ந்து, பொரளை இந்து மயானத்தில் இவரது பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.

மலையகத்தின் வட்டவளையில் 1948ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி பிறந்த முத்தையா,ஹட்டன்ஹைலன்ஸ் கல்லூரியின் பழைய மாணவராவார்.

சுமார் 40 ஆண்டுகால ஊடகத்துறை அனுபவம்கொண்ட முத்தையா இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், லேக் ஹவுஸ் நிறுவனம் ஆகியவற்றில் கடமையாற்றியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .