2021 ஜூன் 14, திங்கட்கிழமை

ஊறிய அரிசியை காய வைத்தவர் கைது

Editorial   / 2017 ஜூன் 01 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளத்தில் சிக்கி, ஊறிய அரிசி மூடைகளிலிருந்து அரிசியை எடுத்துக் காயவைத்து அதனை சந்தைக்குள் மீண்டும் கொண்டுசெல்வதற்கு முயன்ற அரிசி ஆலை உரிமையாளர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

கைப்பற்றப்பட்ட அரிசி, சுமார் 50 ஆயிரம் கிலோகிராம் நிறையை கொண்டது என்றும், அதன் சந்தைப் பெறுமதி 40 இலட்சம் ரூபாயாகும் என்று, மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.  

இரத்தினபுரி பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில், சிக்குண்டு ஊறியிருந்த அரிசி மூடைகளை மீட்ட குறித்த வர்த்தகர், அதனை, சூரியவெவ விளையாட்டு மைதானத்துக்கு அருகில் வைத்து காயவைத்துள்ளார்.  

அவசர தொலைபேசி இலக்கமான 119க்கு தகவல் கிடைத்துள்ள தகவலையடுத்து விரைந்த சூரியவௌ பொலிஸார், அவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .