2021 ஜூன் 21, திங்கட்கிழமை

எந்தக்கட்சிக்கும் ஆதரவு இல்லை : மு. கா. பிரமுகர் எஸ்.பி.மஜீத் அறிவிப்பு

Super User   / 2010 ஏப்ரல் 05 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான அப்துல் மஜீத்  தாம் அதாவுல்லாவின் கட்சியில் இணையப் போவதாகக்கூறப்படும் செய்திக்கு மறுப்புத்தெரிவித்துள்ளார்.

தமிழ்மிரர் இணையதளத்துடன் இன்று தொடர்பு கொண்டு எஸ்.பி.மஜீத் என்றழைக்கப்படும் முன்னாள் பொலீஸ் அத்தியட்சகர் அப்துல் மஜீத் தன்னுடைய கருத்துக்களை முன்வைத்தார்.

கடந்த மாகாண சபைத்தேர்த்லில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப்பெற்றது மாத்திரமல்ல,தனக்கென்றொரு வாக்கு வங்கியொன்றை வைத்திருப்பதாகவும் அப்துல் மஜீத்  தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் தான் தேசியப்பட்டியல் பதவி கேட்கவில்லை என்றும்,தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே தமது கோரிக்கை என்றும் அவர் கூறினார்.

தனக்கு போட்டியிடும் சந்தர்ப்பம் வழங்கப்படாததன் காரணமாக இம்முறை தாம் எந்தக்கட்சிக்கும் ஆதரவு வழங்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .