2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

எனக்கு வலிக்கின்றது: விமல்

Thipaan   / 2016 மார்ச் 09 , பி.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேரர்களில் முக்கியமானவருமான உடுவே தம்மாலோக்க தேரர் தொடர்பில் கேள்வி எழுப்பிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்ச, தேரர்களை கைது செய்வது எனக்கு வலிக்கின்றது என்றார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (09) பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் ஒழுக்கப் பிரச்சினையை எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'உடுவே தம்மாலோக்க தேரரை கைது செய்துள்ளதாக அறிகின்றேன். வில்பத்து சரணாலயத்தை அழித்த அமைச்சர் சுதந்திரமாகச் சுற்றித்திரிகின்றார். எனினும், விஹாரையில் யானைக்குட்டியை வைத்திருந்தமைக்காக தேரரைக் கைது செய்துள்ளீர்கள். இது நியாயமா? இதற்குப் பதிலளிக்க வேண்டும்' என்று கூறினார்.

இதன்போது ஆளும் தரப்பின் வரிசையில் இருந்தவர்கள் ஏதோ கூறிவிட்டனர். இடைமறித்த விமல் வீரவன்ச எம்.பி, தேரர்களைக் கைது செய்வது உங்களுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் எனக்கு வலிக்கின்றது என்றார்.

இதற்குப் பதிலளித்த சட்டம் ஒழுங்குகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாஹல ரத்னாயக்க, இந்த விவகாரம் தொடர்பில் நீங்கள் கூறிதான் கேள்விப்பட்டேன். தேடியறிந்து பதிலளிப்பேன் என்றார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .