2021 ஜூன் 19, சனிக்கிழமை

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று எரிபொருளுக்கு தட்டுப்பாடு

Super User   / 2010 ஏப்ரல் 02 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் விநியோக நிலையங்களிலிருந்து எரிபொருள் விநியோகிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

இன்று மாலைக்குள் இந்த நிலைமை வழமைக்குத்  திரும்பும் என டெயிலிமிரர் இணையதளத்திடம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

புதிய முறையில் கணனிமயப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இந்த புதிய முறையானது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமையகத்திலிருந்து  அதன் எரிபொருள் விநியோக வர்த்தக நிலையங்களுக்கு தொடர்புபடுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதனாலேயே, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .