2021 ஜூன் 16, புதன்கிழமை

ஐக்கிய நாடுகள் சபையின் இரட்டை நிலைப்பாடு ; இலங்கை குற்றச்சாட்டு

Super User   / 2010 ஏப்ரல் 02 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் இரட்டை நிலைப்பாடு குறித்து இலங்கை கேள்வி எழுப்பியுள்ளது.

இலங்கை குறித்து விசாரணை நடத்துவதற்காக ஒன்பது மாத காலத்திற்குள் நிபுணர் குழுவொன்றைஅமைக்க ஐக்கிய நாடுகள் சபை முயல்வதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

இதேவேளை, ஈராக்கில் பிரிட்டன் இராணுவத்தினருக்கு எதிரான விசாரணைகளை நடத்துவதற்கான குழுவொன்றை அமைப்பதற்கு ஒன்பது வருட காலத்தை ஐக்கிய நாடுகள் சபை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையிலேயே, ஐக்கிய நாடுகள் சபையின் இரட்டை நிலைப்பாடு குறித்து அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கேள்வி எழுப்பினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .