2021 ஜூன் 17, வியாழக்கிழமை

ஐ.தே.க உறுப்பினர் சாந்த அபயசேகர மீது ஒழுக்காற்று விசாரணை;கரு ஜயசூரிய

Super User   / 2010 ஏப்ரல் 15 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட பாலித ரங்கே பண்டார மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பாலித ரங்கே பண்டார மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்  சாந்த அபயசேகர மீதே  ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய டெயிலிமிரர் இணையதளத்திற்கு கூறினார்.

சிலாபத்தில் கடந்த 10ஆம் திகதி  இடம்பெற்றிருந்த  கூட்டத்தின்போது, பாலித ரங்கே பண்டார தாக்கப்பட்டிருந்தார்.

இந்த தாக்குதல்ச் சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் சாந்த அபயரட்ன உட்பட 5 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்
 
இதேவேளை, எதிர்வரும் வாரம் பாலித ரங்கே பண்டாரவுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவிருப்பதாக அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .