2021 ஜூன் 24, வியாழக்கிழமை

ஐ.தே.க சிரேஷ்ட உறுப்பினர் காதர் ரணிலின் தலைமைத்துவத்துக்கு எதிர்ப்பு

Super User   / 2010 மே 05 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம். காதர் இன்று மாலை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அவசர கால சட்டமூல வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.

இதுசம்பந்தமாக தமிழ்மிரர் இணையதளம் சற்று முன் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம். காதருடன் தொடர்புகொண்டது.

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக வாக்களிக்கும் உரிமை தனக்கு உண்டு என்றும், அந்த அடிப்படையிலேயே தான் வாக்களித்தாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கண்டி மாவட்டத்தில் இரண்டு முஸ்லிம்களை நிறுத்தும் படி கட்சித் தலமையிடம் வேண்டியிருந்தேன்.

எனினும் என்னுடைய வேண்டுகோளை கட்சி தலைமைத்துவம்  நிராகரித்து விட்டு, மூன்று முஸ்லிம்களை வேட்பாளராக நிறுத்தியிருந்தது. இதனால், கண்டியில் சிங்கள், முஸ்லிம் மக்களிடைய பிரச்சினைகள்  தோன்றியுள்ளது. 

தனக்கு வாக்களிக்கவிருந்த 15,000 சிங்கள மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

உங்களுக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தால் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என்று தமிழ்மிரர் இணையதளம் நாடாளுமன்ற உறுப்பினர் காதரிடம் வினவியது.

அதற்கு அவர், கட்சி தன் மீது என்ன விதமான ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தாலும் தான் அதற்கு முகங்கொடுக்கத் தயார். ஐக்கிய தேசியக் கட்சியில் தான் ஒரு சிரேஷ்ட தலைவர். கடந்த 21 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றேன்.

இருந்தபோதிலும், தன்னுடைய சொல்லைக் கேட்காமல் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ, ரவுப் ஹகீமின் பேச்சைக் கேட்கின்றார்.இதனால் , தான் இனி ஒருபோதும் ரணில் விக்ரமசிங்ஹவின் பேச்சைக் கேட்கத் தயாரில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தான் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியிலேயே இருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்று மாலை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இவர் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.(R.A)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .