2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஐ.தே.க தலைமையிலான கூட்டணியிலிருந்து மனோ கணேசனின் கட்சி வெளியேறியது

Super User   / 2010 ஏப்ரல் 22 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனுக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்காமையினால் ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து, ஜனநாயக மக்கள் முன்னணி பிளவுபட்டுள்ளது.

டெயிலிமிரர் இணையதளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய  அமைப்பாளர் பிரபா கணேசன் இதனைக் கூறினார்.

நாடாளுமன்றத்திற்கான தேசியப் பட்டியலில் புதிய உறுப்பினர்களை இறுதிப்படுத்தியுள்ளமை  தொடர்பிலேயே ஐக்கிய தேசிய முன்னணிக்கும், தமது கட்சிக்கும் இடையில் பிளவு ஏற்பட்டிருப்பதாகவும் பிரபா கணேசன் குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசாங்கத்தில் இணையுமாறு  ஜனநாயக தேசிய முன்னணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக டெயிலிமிரர் இணையதளத்திற்கு அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் ஜனநாயக தேசிய முன்னணி மற்றும் அரசாங்கதிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுவருவதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .