2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஐ.நாவின் விசேட பிரதிநிதி லியென் பெஸ்கோ மே மாதம் இலங்கைக்கு விஜயம்

Super User   / 2010 ஏப்ரல் 27 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி லியென் பெஸ்கோ எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியில் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்வதற்கான அனுமதி ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே லியென் பெஸ்கோ இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.

இலங்கையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்செயல்களை விசாரணை செய்வதற்காக நிபுணர்கள் குழுவை அமைப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை பரிசீலித்துவந்திருந்தது. இந்த நிலையில்,  இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருக்கும் லியென் பெஸ்கோ, இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், லியென் பெஸ்கோவின் விஜயத்தின்போது நிபுணர்கள் அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெறமாட்டாது என ஐக்கிய நாடுகள் சபையின் உயர் மட்டத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .