2021 ஜூன் 16, புதன்கிழமை

ஐ.நா செயலாளரின் நிபுணர் குழு அமைக்கும் திட்டத்திற்கு இலங்கை எதிர்ப்பு

Super User   / 2010 மார்ச் 19 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்  தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான்கீமூன் அமைக்கும் திட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் ஐக்கிய நாடுகள் சபையுடன் சிறந்த முறையில் இரு தரப்பு உறவுகளை பேணிவருவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

இலங்கையின் நிலைப்பாடு குறித்து கவனம் செலுத்தாது, பான்கீமூன் நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடாது எனவும் அவர் கூறினார். இவ்வாறு, பான்கீமூன் செயற்படுவாரானால் அவருக்கு எதிராக மக்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பும்  எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .