Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 09, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2024 ஏப்ரல் 09 , பி.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு -10 டி பி. ஜயா மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையக கட்டிடம் யாருக்கு சொந்தமானது என்ற கேள்வி இன்று (09) மீண்டும் எழுந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விசுவாசமான குழுவின் பதில் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சாரதி துஷ்மந்த மித்ரபால, தலைமையகத்திற்குள் இன்று (09காலை நுழைய பொலிஸாருடன் சென்ற போது கதவுகளில் போடப்பட்டிருந்த பூட்டுகளை திறக்க சாவிகள் இல்லாததால் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்.
அப்போது, தானும் தனது குழுவினரும் கட்டிடத்திற்குள் நுழைய முடியாமல் போனதற்கு காவல்துறைதான் பொறுப்பேற்க வேண்டும் என்று பதில் செயலாளர் கூறினார்.
கட்சித் தலைமையகத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் செய்தியாளர் மாநாட்டை நடாத்திவிட்டு அங்கிருந்து வெளியேறியதாக அவரது முறைப்பாட்டின் பிரகாரம் தலைமையகத்திற்கு பொலிஸார் சீல் வைத்ததுடன் யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. எனவே காவல்துறையே அனைத்துப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றார்
இதன்போது பதில் செயலாளருக்கும் பொலிஸாருக்கும் இடையில் பெரும் பதற்றமும் காரசாரமான சூழ்நிலையும் நிலவியதுடன் அங்கிருந்த கட்சி உறுப்பினர்களும் பொலிஸாரிடம் பல்வேறு விடயங்களைத் தெரிவித்தனர்.
இறுதியாக, பதில் செயலாளரும் கட்டிடத்தின் வாயிலில் புதிய பூட்டை போட்டுவிட்டு சாவிகளை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago