Yuganthini / 2017 ஜூன் 15 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல மாதங்களாக ஹட்டன் நகரில் சேர்ந்துள்ள குப்பைகள் அகற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹட்டன் நகர வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹட்டன் நகரிலுள்ள மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்னாள் இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது
நகரத்தில் உள்ள அனைத்து கடைகளையும் மூடிவிட்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டனர்.
கடந்த சில மாதங்களாக ஹட்டன் நகரில் குவியும் குப்பைகளை நகரபையினர் அகற்றவில்லை எனவும், இதன்காரணமாக நகரின் பல பகுதிகளிலும் குப்பைகள் குவிந்துக்கிடப்பதுடன் துர்நாற்றம் வீசுவதாகவும் ஆர்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அவ்விடத்திற்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான், குப்பைகளை உடனடியாக அற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
தேங்கிக்கிடக்கும் குப்பைகளை ஒரு மணித்தியலயத்தில் அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், தற்காலிகமாக நுவரெலியா நகரசபைக்கு உட்பட்ட பத்தனை பிரதேசத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தொண்டமானின் உறுதிமொழியை அடுத்து 10.30 மணியளவில் ஆர்பாட்டம் கைவிடப்பட்டது.
ஆர்பாட்டத்திகால் ஹட்டன் நகரம் ஸ்தம்பிதம் அடைந்ததுடன் போக்குவரத்தும் பல மணித்தியாலங்கள் தடைப்பட்மை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
25 Oct 2025