2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

கண்டி மாவட்டத்தில் மனோ கணேசனின் வெற்றி இன்னும் ஊர்ஜிதம் இல்லை

Super User   / 2010 ஏப்ரல் 09 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கண்டி மாவட்டத்தில் வெற்றிபெற்றுள்ளார் என்பது குறித்து உறுதிப்படுத்தக்கூடிய செய்திகள் எதுவும்   இதுவரை தமிழ்மிரர் இணையதளத்துக்கு கிடைக்கவில்லை.

இது தொடர்பாக தமிழ்மிரர் இணையதளம் பலமுறை மனோ கணேசனுடன் தொடர்பு கொண்டது.

ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் மனோ கணேசன் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டார். அவரது பிரசார நடவடிக்கைகளுக்காக ஆளும் தரப்பு அரசியல்வாதிகளினால் பல்வேறு வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,மனோகணேசனின் அலுவலக முக்கியஸ்தர் ஒருவருடன் தமிழ்மிரர் இணையதளம் தொடர்புகொண்டது.

மனோ கணேசன் தற்போது வாக்குகளை எண்ணும் நிலையத்தில் இருப்பதனால் அவருடன் தொடர்புகொள்ள முடியாதநிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனினும்,மனோ கணேசனுக்கு எம்முடன் தொடர்புகொள்ளுமாறு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .