2021 மே 15, சனிக்கிழமை

காற்றின் வேகம் அதிகரிக்கும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

Niroshini   / 2017 ஜூன் 10 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துரை ஊடாக திரு​கோணமலை வரை  மற்றும் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டையில் ஊடாக பொத்துவில் வரையான கடற்கரையோர பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், நாடடைச் சுற்றிய ஏனைய கடற்கரைப் பிரதேசங்களில், மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும்  வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், மீனவர்கள் மற்றும் கடற்கரையோர பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும்  அவ்வப்போது மணிக்கு 50 கி.​மீ வரை காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .