2021 ஜூன் 24, வியாழக்கிழமை

கல்முனை மாநகரசபையின் முதல்வராக மஷூர் மௌலானா நியமனம்

Super User   / 2010 ஏப்ரல் 11 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE கல்முனை மாநகர முதல்வராக பிரதி மேயர் மஷூர் மௌலானா நியமிக்கப்படவுள்ளார் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற கட்சியின் அரசியல் உயர்பீடக்கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தேர்தலில் கல்முனை மாநகர மேயர் எச்.எம்.ஹரீஸ் வெற்றிபெற்றதைத்தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு மஷூர் மௌலானா நியமிக்கப்படவுள்ளார்.

பிரதி மேயராக கல்முனை மாநகர சபை உறுப்பினர் பஷீர் நியமிக்கப்படவுள்ளார் என்றும் ஹசனலி மேலும் தெரிவித்தார்.

முன்னாள் செனட்டரும்,மூத்த அரசியல்வாதியுமான மஷூர் மௌலானா ஐக்கிய தேசியக்கட்சியின் நீண்ட கால உறுப்பினராகவும் திகழ்ந்தார்.

ஸ்தாபகத்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் காலகட்டத்தில் இவர் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டார். 


  Comments - 0

  • abdullah Monday, 12 April 2010 05:44 PM

    மூத்த அரசியல்வாதி இவர். இவருக்கு பாராளுமன்ற உறப்பினர் பதவி தருவதாக பல முறைகள் ஏமார்த்தப்பட்டவர். மேயர் பதவி அவருக்கு கிடைக்க வேண்டிய ஒன்று தான். இப்பதவி கிடைத்தது அவர் அவரின் ஊருக்கு பெற்றுத்தந்த பெருமைகளில் இன்னுமொன்று. அவரின் நீண்ட ஆயுளுக்காக பிராத்திப்போம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .