Mithuna / 2024 பெப்ரவரி 29 , பி.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் புது டெல்லியை நோக்கி பேரணி நடத்த முடிவு செய்தனர். இதற்காக பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்தில் இருந்து புறப்பட்டனர். ஆனால் அரியானா, பஞ்சாப் மாநில எல்லைகள் மூடப்பட்டு, விவசாயிகள் புது டெல்லி நோக்கி செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
கடந்த 21- ஆம் திகதி பஞ்சாப் - அரியானா எல்லை கனாரி பகுதியில் தடுப்புகளை தாண்டி விவசாயிகள் புது டெல்லி நோக்கி புறப்பட முயன்றனர். அப்போது பஞ்சாப் எல்லைக்குள் புகுந்து அரியானா பொலிஸார் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது. இதில் சுப்கரண் சிங் என்ற 21 வயது இளம் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். அதேவேளையில் 12 பாதுகாப்பு பொலிஸாரும் காயம் அடைந்தனர்.
சுப்கரண் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சுப்கரண் சிங் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். அதுவரை அவரது உடலை அடக்கம் செய்யமாட்டோம் என அறிவித்தனர்.
இந் நிலையில் ஒருவாரம் கழித்து பொலிஸார் கொலை வழக்கு உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரியானாவின் சிந்து மாவட்டத்தில் உள்ள கார்கி என்ற இடத்தில் சம்பவம் நடைபெற்றதாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
46 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
58 minute ago