2021 ஜூன் 16, புதன்கிழமை

கிளிநொச்சி மாவட்டத்தில் மேலதிக வாக்களிப்பு நிலையங்கள்

Super User   / 2010 மார்ச் 09 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கிளிநொச்சி மாவட்டத்தில் கூடுதலான வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதற்கு தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் பெரும் எண்ணிக்கையான மக்கள் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் நிலையிலேயே, கூடுதலான வாக்களிப்பு நிலையங்களை அமைக்க தேர்தல்கள் அதிகாரிகள் திட்டமிட்டுவருகின்றனர்.

டெயிலிமிரரிற்கு கருத்துத் தெரிவித்த யாழ் மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் பி.குகநாதன், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, குறைந்தளவு வாக்களிப்பு நிலையங்கள் காணப்பட்டதாகவும் கூறினார்.

கூடுதலான வாக்களிப்பு நிலையங்களை அமைப்பது தொடர்பில் எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி கலந்துரையாடலொன்று நடைபெறவிருப்பதாகவும்  பி.குகநாதன் தெரிவித்தார்.

இதேவேளை, மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியில் மேலதிகமாக நான்கு வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவிருப்பதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .