Suganthini Ratnam / 2017 மே 28 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ.ஹுஸைன்
பிறந்து ஒரு நாளேயான சிசுவொன்று ஏறாவூர் சர்வோதய வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில், சனிக்கிழமை (27) மாலை மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைவிடப்பட்ட இந்தச் சிசுவைக் கண்ட பொதுமக்கள்,; அச்சிசுவைப் பாதுகாப்பாக மீட்டு, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
அச்சிசு மேலதிகப் பராமரிப்புக்கும் சிகிச்சைக்குமாக உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த பொலிஸார், சிசுவின் தாயைத் தேடி வருவதாகவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .